உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீபாவளிக்கு முன் கரும்பு தொகை; விவசாயிகள் கோரிக்கை

தீபாவளிக்கு முன் கரும்பு தொகை; விவசாயிகள் கோரிக்கை

செஞ்சி; தீபாவளிக்கு முன் கரும்பு கிரய தொகை மற்றும் லாபத்தில் பங்கு தர வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் வரதராஜ், நரசிம்மராஜ், வீரராகவன், பழனி, வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை பொது மோலாளர் பிரபாகரன், கரும்பு பிரிவு மேலாளர் சிவசண்முகம் ஆகியோரை சந்தித்து அளித்த மனு: சிறப்பு அரவை பருவத்திற்கு சப்ளை செய்த கரும்பு கிரய தொகையையும், 2008-09ம் ஆண்டில் முண்டியபாக்கம் ராஜ்ஸ்ரீ சக்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பியதில் ஐகோர்ட் உத்தரவின்படி லாபத்தின் பங்கை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும். நடப்பு அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டும் மகாராஷ்டிரா, ஆந்திரா தொழிலாளர்களுக்கு டன் ஒன்றுக்கு 800 ரூபாய்க்கு குறைவாகவும், வண்டி மாமூல் 700 ரூபாய்க்கு மேல் அதிகரிக்காமலும் கட்டுப்படுத்த வேண்டும். நடப்பு அரவைப் பருவத்திற்கு நடவு மானியம், மறுதாம்பு பயிர் பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும். உரத்தட்டுபாட்டினால் யூரியா உரம் கிடைக்கவில்லை. எனவே ஆலை மூலம் உரங்களை வாங்கி தர வேண்டும். கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டும் ஆட்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். கரும்பு நடவு, அறுவடை இயந்திரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு களப்பணியாளர்கள் உற்பத்தி மற்றும் அபிவிருத்தியை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை