விவசாயிகளுக்கு பழ மரக்கன்று வழங்கல்
வானுார்: பரங்கினி துணை வேளாண் விரிவாக்க மையத் தில் சிறுவை மற்றும் எடையப்பட்டு விவசாயிகளுக்கு பழ மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கினார். விழாவில், விவசாயிகளுக்கு இயற்கை உரங்களான மண்புழு உரம் தயார் செய்ய மண்புழு உர படுக்கை மற்றும் பழ மரச்செடிகளான பலா, மா, கொய்யா, நெல்லி, மாதுளை, எலுமிச்சை கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் வேளாண்மை பயிர்களுடன் இதர தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பழ மரக்கன்று சாகுபடி செய்தல் , தேனீ வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பு போன்றவற்றின் மூலமாக விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும்.நிகழ்ச்சியில் துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் வாசமூர்த்தி, விஜயலட்சுமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.