உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் நிலைய பணிகள்; பொது மேலாளர் ஆய்வு

ரயில் நிலைய பணிகள்; பொது மேலாளர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதலின் பேரில் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடக்கிறது. இந்நிலையில், தனி ஆய்வு ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்ற தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங், விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு திடீரென வந்திறங்கினார்.தொடர்ந்து, ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர்களில் நடக்கும் பணிகளையும், முகப்பு வாயிலில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்கும் படி, ரயில்வே அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 10:50 மணிக்கு, திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை