உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழ்ச்சங்கம் பொதுமறை விழா

தமிழ்ச்சங்கம் பொதுமறை விழா

விழுப்புரம் : விழுப்புரம் பொதுமறை தமிழ்ச்சங்கம் சார்பில் விருது வழங்கல், நுால் வெளியீடு, அரசின் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு என்ற பொதுமறை விழா நடந்தது. பொதுமறை தமிழ் சங்க தலைவர் கலியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் மைசூர் கர்ணன், பாவேந்தர் பேரவை செயலர் உலகதுரை, காந்தி நினைவு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் குமார், வெங்கடேஸ்வரா பள்ளி தாளாளர் செந்தில்குமார், சின்னசேலம் தமிழ் சங்க தலைவர் கவிதைத்தம்பி முன்னிலை வகித்தனர்.சங்க செயலர் செல்வராஜ், பொருளாளர் விக்டர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். துணை தலைவர் பீட்டர் அந்தோனிசாமி நோக்க உரையாற்றினார். விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சேகர், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., கனகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விருதுகளை வழங்கி, நுால்கள் வெளியிட்டனர்.விருது பெற்ற மைசூர் கர்ணன், ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலர் கோபிநாத், நில அளவை அலுவலர் தங்கவேலு, வேளாண் அலுவலர் பன்னீர்செல்வம், கோட்டை ஏகலைவன், புதுச்சேரி கால்நடை டாக்டர் ராஜா ரங்கராமானுஜம், கோவை அமுதா சிங்காரவேலு, பள்ளிக்கொண்டா அமுதவல்லி, உளுந்துார்பேட்டை ரவிச்சந்திரன் ஏற்புரையாற்றினர். அருணா தொல்காப்பியன், வளவனூர் முருகன், விருதை ஆறுமுகம், ஆனத்துார் பெருமாள், தோகைப்பாடி பிரபாகரன், சுந்தரமூர்த்தி விருது பெற்றனர். அரசின் தமிழ் பற்று விருது பெற்ற ராமநாதபுரம் தமயந்தி, பனமலை ஆசைத்தம்பி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பாவரங்கம் நடந்தது. பேராசிரியர் சச்சிதாநந்தம், பாலச்சந்தர், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை