மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
18-Mar-2025
விழுப்புரம் : டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சிறப்பு பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. துணை தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் ஜான் அந்தோணிராஜ் வரவேற்றார். துணை பொது செயலாளர் முருகன், பொது செயலாளர் திருச்செல்வன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாநில பொது செயலாளர் சுகுமாறன் சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், தலைவர் சிங்காரவேலு, பொருளாளர் சேகர், இணை செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் புதிய தலைவராக முருகன் தேர்வு செய்யப்பட்டார். டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் கணபதி நன்றி கூறினார்.
18-Mar-2025