இறந்த காவலரின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி
விழுப்புரம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் சத்தியமூர்த்தி,27; இவர், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஒரு அரசியல் கட்சி மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு, 26ம் தேதி இரவு 8:00 மணியளவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர் அகரம் மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கார் மோதிய விபத்தில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.