மேலும் செய்திகள்
ஈரோடு ஜவுளி சந்தையில் பொங்கல் விற்பனை துவக்கம்
01-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் வணிகர் சங்கத்தினர் புகாரையடுத்து, பொங்கலுக்காக தற்காலிக ஜவுளி கடை வைத்திருந்த மண்டபத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே வி.வி.ஏ., மண்டபத்தில் சூப்பர் பஜார் என்ற பெயரில் ஜவுளி விற்பனை கடையும், கே.கே.ரோடில் ஒரு மண்டபத்தில் காலணி மொத்த விற்பனையும் கடை வைத்து சிலர் அனுமதியின்றி விற்பனை செய்வதால், உள்ளூர் வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்படுவதாக, விழுப்புரம் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில், இரு தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்தனர். இதனையடுத்து, நேற்று காலை 8.30 மணிக்கு, விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் கதிர்வேல், வி.ஏ.ஓ., முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர் தஷ்ணாமூர்த்தி முன்னிலையில், நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட்அருள்ராஜ், ஆய்வாளர் மதன்ராஜ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், விழுப்புரம் பஸ் நிலையம் எதிரே வி.வி.ஏ., மண்டபத்தில் இருந்த ஜவுளி கடையை சீல் வைத்து மூடினர். நகராட்சி சட்ட விதிகள்படி, கடை செயல்படுவதற்கு உரிய தொழில் உரிமம் பெறாததால், சீல் வைப்பதாக குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டினர்.அப்போது, அந்த ஜவுளி கடை வைத்திருந்த தர்மபுரியைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் குடும்பத்தினர் வந்து, சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகையின்போது அனுமதி பெற்று, வாடகை ஒப்பந்தம் போட்டு, கடை நடத்தி வருகிறேன். மொத்த விலைக்கு ஜவுளி வாங்கி வந்து, குறைந்த விலைக்கு விற்கிறேன். இந்தாண்டு தான் வியாபாரத்தை தடுக்கின்றனர். ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்திலும், நகராட்சியிலும், 10 நாள்கள் விற்பனை அனுமதிக்கு கடிதம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார். பொங்கல் ஜவுளி விற்பனை கடை சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
01-Jan-2025