உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்

தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்

வானுார்:வானுார் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பலானது.வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம் ரோடு ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 64; இவர் தனது மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பக்கத்தில் உள்ள அவரது தம்பி வீட்டிற்குச் சென்றிருந்தனர்.அப்போது திடீரென விநாயகமூர்த்தி வீடு தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி