சிக்கன் பகோடா தர மறுத்த ஊழியரின் மூக்கை கடித்தவர் கைது
விழுப்புரம்; விழுப்புரத்தில் சிககன் பகோடா தர மறுத்த சப்ளையரை தாக்கி அவரின் மூக்கை கடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் நாகராஜன்,38; இவர், எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்த கொட்டப் பாக்கத்துவேலி கிராமத் தைச் சேர்ந்த வெங்கடேசன், 24; என்பவர், நாகராஜனிடம் சிக்கன் பக்கோடா தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு, நாகராஜன் தீர்ந்துவிட்டது என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த வெங்கடேசன், நாகராஜனை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதோடு அவரது மூக்கை கடித்து, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர்.