மாயமான மயான பாதை சுடுகாடானது நெடுஞ்சாலை
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் விக்கிரவாண்டி வராக ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதன் காரணமாக வராக ஆற்றில் இருந்த பழைய மேம்பாலத்தில் ஒரு பகுதியும், அருகில் இருந்த மயானத்திற்கு செல்லம் பாதையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக மாயானத்திலுள்ள தகனமேடைக்கு செல்லும் பாதை மேடு பள்ளங்களுடன் காட்சி யளிக்கிறது.இதனால், கடந்த இரு வாரங்களாக விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் இறக்கும் நபர்களின் உடல்களை இடுகாட்டில் தகனம் செய்ய முடியாமல் பழைய கும்பகோணம் சாலை ஓரமாக உடல்களைக் கிடத்தி தகனம் செய்தும் அப்பகுதியிலேயே பள்ளம் தோண்டி உடல்களை புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பொது மக்களின் இந்த தர்ம சங்கடமான செயல்பாட்டை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், சேதமடைந்த மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.