உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கனமழையை எதிர்கொள்ள மீட்புக் குழுவினர் தயார்! காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அலர்ட்

கனமழையை எதிர்கொள்ள மீட்புக் குழுவினர் தயார்! காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அலர்ட்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து இரு தினங்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதனையொட்டி, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி ஆலோசனை வழங்கியுள்ளார்.குறிப்பாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் நேற்று பேரிடர் தடுப்பு உபகரணங்களுடன் தயாராகினர்.தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் யமுனாராணி தலைமையில், நேற்று காலை தீ தடுப்பு, பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார்படுத்தி வைத்தனர். 4 தீயணைப்பு வாகனங்கள், மரம் வெட்டும் கருவிகள், கட்டட இடிபாடுகளை அகற்றும் கருவிகள் என மீட்புக் கருவிகள், ஜெனரேட்டர், மின் விளக்குகள், ரப்பர் போட்டுகள், மிதவை உபகரணங்கள், பாம்பு பிடி உபகரணங்களை தயார்படுத்தினர்.மீட்பு பணிகளில் ஈடுபட முன்னணி வீரர்கள் ஷாஜகான், பிரபு தலைமையில் 44 பேர் தயார் நிலையில் உள்ளனர்.இதே போல், திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லுார், கோட்டக்குப்பம் உள்ளிட்ட அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் குழுவினர் தயார்படுத்தப்பட்டுள்ளனர். காவல் துறை சார்பில் எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில், மரக்காணம், கிளியனுார், வானுார், ஆரோவில், திண்டிவனம் உள்ளிட்ட கடலோர பகுதி காவல் நிலையங்களில், போலீசார் மீட்பு உபகரணங்கள், ரப்பர் போட்டுகள், மிதவை கருவிகள், முதலுதவி கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.இதே போல், பிற காவல் நிலையங்களிலும், மீட்பு படையினர் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள 40 காவல் நிலையங்களிலும், போலீஸ் குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னேற்பாடு தயார்

அமைச்சர் பொன்முடிபருவமழை முன்னேற்பாடு பணி குறித்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், 'பஸ் நிலையத்தில், மழைநீர் தேங்குவதை முழுவதுமாக வெளியேற்றிடும் வகையில், கூடுதல் திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்கள் தெரிவித்திட, கலெக்டர் அலுவலத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 04146-223265 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு, பாதிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.குறிப்பாக கடலோர பகுதிகளான மரக்காணத்தில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையங்களில் 9,500 பேர் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 122 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். தொடர்ந்து பாண்டியன் நகரின் வழியாக பொன்னேரிக்கு செல்லும் மழைநீர் வாய்க்கால் துார்வாரப்பட்டுள்ளதையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை