உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயங்கி விழுந்து வாலிபர் சாவு

மயங்கி விழுந்து வாலிபர் சாவு

விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலை காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம், கடந்த 10ம் தேதி மதியம் 35 வயது மதிக்கத் தக்க ஆண் நபர் ஒருவர் உடல் நலம் பாதித்து மயங்கி விழுந்து கிடந்தார். அங்கிருந்த பொது மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து விழுப்புரம் டவுன் வி.ஏ.ஓ., பத்மாவதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை