உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

திருவெண்ணெய்நல்லுா : திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மன்றத் திறப்பு விழா, மற்றும் அறிவியல் கண்காட்சி என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு, நிர்வாக இயக்குநர் விஜயசாந்தி தலைமை தாங்கினார். தாளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் வைபவ் சிறப்புரையாற்றி அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார்.விழாவில் விழுப்புரம் காமதேனு லயன்ஸ் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், விழுப்புரம் மெயின் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா, அன்னை மரகதம் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், விழுப்புரம் காமதேனு லயன்ஸ் சங்க வட்டார தலைவர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை