உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேனி ஊராட்சி தலைவர்கள் பரையந்தாங்கலில் பார்வை

தேனி ஊராட்சி தலைவர்கள் பரையந்தாங்கலில் பார்வை

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த பரையந்தாங்கல் ஊராட்சியில் நடைபெறும் செயல் திட்டங்களை தேனி மாவட்ட பெண் ஊராட்சி தலைவர்கள் நேரில் பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியின்போது, ஊரக வளர்ச்சி , ஊராட்சி துறை சார்பில் பெண் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பட்டறிவு பயணம் எனும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். பயிற்சியை ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார்.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர்கள், மத்திய அரசின் தன்னிறைவு பெற்ற கிராமமாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு ஜனாதிபதியின் பாராட்டை பெற்ற இந்த கிராமத்தின் கட்டமைப்புகள், மகிளா சபா, பால சபா, நிலைக்குழுக்கள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.மாவட்ட வளமைய அலுவலர் ஜெயேஷ், மாவட்ட முதன்மை பயிற்றுநர் கலியமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை