உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிராபிக் போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி

டிராபிக் போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி

விழுப்புரம் : விழுப்புரத்தில் கோடை வெயிலுக்காக, போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கோடை வெயில், மழைக் காலங்களில் தவிக்கும் போலீசாருக்கு, தொப்பி, ரெயின் கோட் உள்ளிட்ட உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடை காலத்தையொட்டி கடும் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் நேற்று வழங்கப்பட்டது. விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங்கிளாசை எஸ்.பி., சரவணன் வழங்கினார். அதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்ததலை எஸ்.பி., சரவணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, டி.எஸ்.பி., ஞானவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, ஸ்ரீதரன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை