மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்
25-Dec-2024
விழுப்புரம்: திருவள்ளுவர் தினத்தை யொட்டி, விழுப்புரத்தில் பொதுமறை தமிழ் சங்கம் சார்பில் கவியரங்கம் நடைபெற்றது.திருவள்ளுவர் தினத்தை யொட்டி, விழுப்புரத்தில் பொதுமறை தமிழ் சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, விழுப்புரம் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியில் 'பொதுமறையின் புனிதவழி' தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாவேந்தர் பேரவை தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார்.பொருளாளர் சிவக்குமார், பொதுமறை இலக்கணக்குழு ஆசிரியர் ரவிச்சந்திரன், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். நடராஜா பள்ளி தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுந்தர அருணகிரி திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து நடந்த கவியரங்கில், தனசேகரன், கஸ்துாரி தியாகராஜன், நாகராஜன், பார்க்கவன், சுதாகர், மாதவி ராஜேந்திரன், பாலச்சந்தர், அருண் துர்கா, ஜனனி ஆகியோர் பேசினர். பொருளாளர் விக்டர் நன்றி கூறினார்.
25-Dec-2024