உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம் 7ம் வகுப்பு மாணவி சாதனை

திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம் 7ம் வகுப்பு மாணவி சாதனை

செஞ்சி : 1330 திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து அரசு பள்ளி 7ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தை சேர்ந்த சுந்தர்-கோகிலா தம்பதியின் மகள் பிரதிஷா,12; அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.அரசு நடத்திய கலைத்திருவிழாவில், ஓவிய போட்டியில் பங்கேற்றதன் மூலம், ஓவியம் வரைவதில் திடீரென ஆர்வம் ஏற்பட்டது.பெஞ்சல் புயலின் போது கிடைத்த பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த பிரதிஷா திருவள்ளுவர் ஓவியத்தை 1330 திருக்குறள்களை கொண்டு வரைந்து அசத்தி உள்ளர். இச்சாதனையை, 'ஆல் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.சாதனை படைத்த மாணவி பிரதிஷாவை தலைமையாசிரியர் பாஸ்கரன், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை