உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவள்ளுவர் சிலை திறப்பு

திருவள்ளுவர் சிலை திறப்பு

செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது.செஞ்சி ஒன்றியம், நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1990--91 ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழாவிற்கு தலைமை ஆசிரியர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் அருளாளன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.தனம் அம்மாள், துரை முனிசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் கடந்த கல்வி ஆண்டில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்ற தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் வழங்கினார்.பி.டி.ஏ., தலைவர் கதிர்வேல், முன்னாள் தலைவர் மனோகரன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் அறிவழகன் உள்ளிட்டவர்கள் வாழ்துரை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை