உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு பூஜை

வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணனர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு உற்சவர் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து 1500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்தனர். ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி பூஜையை துவக்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், ஜெயந்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை