உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பவ்டா கல்லுாரியில் முப்பெரும் விழா

பவ்டா கல்லுாரியில் முப்பெரும் விழா

மயிலம்: மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு, பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு, முதல்வர் சுதா கிறிஸ்டிஜாய் தலைமை தாங்கினார். கல்லுாரி சேர்மன் ஜாஸ்லின் தம்பி, செயலாளர் பிரபலா ஜெ ரோஸ் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து பேசினர். டி.எஸ்.பி., பிரகாஷ் விளையாட்டிற்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பெண்கள் ஆய்வு மைய இணை பேராசிரியர், ஐரோப்பிய ஆய்வு மைய தலைவர் பேராசிரியர் கமலவேணி சிறப்புரையாற்றினார்.விழாவில், கல்லுாரி துணை முதல்வர் சேகர், பவ்டா பொது மேலாளர் செல்வம், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், உடற்கல்வி பேராசிரியர் சிவ மணிகண்டன், மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை மாணவி ஜெனிபர் தொகுத்து வழங்கினார். மாணவி ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை