இன்று டாஸ்மாக் விடுமுறை
விழுப்புரம்:மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு : தமிழக அரசு விதிமுறையின்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டிரைடே அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.