உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பச்சைவாழியம்மனுக்கு இன்று தீமிதி திருவிழா

பச்சைவாழியம்மனுக்கு இன்று தீமிதி திருவிழா

புதுச்சேரி; விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பாக்கம் கிராமத்தில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று தீமிதி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு மன்னாதீஸ்வரர் பச்சைவாழி அம்மன், விநாயகர், பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு பாலமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும், மாலை 5:00 மணிக்கு கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு அருகே குளக்கரைக்கு சென்றடையும். அங்கு பூங்கரகமாக ஜோடித்து பக்தர்கள் புறப்பட்டு அக்னி குண்டத்தோடு தீமிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், விழுப்புரம் மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதலுக்காக தீ மிதிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !