உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிற் சங்க தேர்தல் பிரசார கூட்டம்

தொழிற் சங்க தேர்தல் பிரசார கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற் சங்கம் சார்பில் தேர் தல் பிரசார கூட்டம் நடந்தது.இந்திய ரயில்வே தொழிற் சங்க அங்கீகார தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக் கிறது. அதனையொட்டி தேர்தல் பிரசார கூட்டம், விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நடந்தது.விழுப்புரம் தலைமை கிளை செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மத்திய கிளைச் செயலாளர் வெங்கடேசன், ஒபன் லைன் பிரிவு கிளைச் செயலாளர் கமலநேசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத்தரும் பிரதான சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற் சங்கத்தை ஆதரிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி