மேலும் செய்திகள்
உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
30-Oct-2024
செஞ்சி, : தடாகம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மின்னணு தேசிய விவசாய சந்தை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. செஞ்சி வேளாண் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் நடந்த முகாமிற்கு, உதவி வேளாண் அலுவலர் சுஜாதா தலைமை தாங்கி வேளாண்மைத்துறையில் உள்ள மான்ய திட்டங்கள் குறித்து விளக்கினார். ஊராட்சி தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் செந்தில்நாதன் மின்னணு தேசிய விவசாய சந்தை குறித்து விளக்கினார். உதவி பொறியாளர் அமலன் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்கள் பற்றி விளக்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஜெய்கணேஷ், கவிதா பங்கேற்றனர். தொழில் நுட்ப மேலாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
30-Oct-2024