பயிற்சி முகாம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. பி.டி.ஓ., சையது முகமது தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நாராயணன் முன்னிலை வகித்தார். சத்துணவு உதவியாளர் காயத்ரி வரவேற்றார். பயிற்சியாளர் டெபாரோ ரோஸ்லின், பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி அளித்தார். மேலாளர் கலைவாணி, சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர்.