உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்வது, பணிபுரிவது தொடர்பான, பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் மாலை, திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மயிலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் , சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், தாசில்தார் யுவராஜ், தேர்தல் துணை தாசில்தார் விமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் திண்டிவனம் மற்றும் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை