மேலும் செய்திகள்
தேசிய திருநங்கைகள்தினம் கொண்டாட்டம்
16-Apr-2025
திருநங்கைகளுக்கு உயர்கல்வி நிதியுதவி
04-May-2025
விழுப்புரம்,: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்க, பல்வேறு மாநிலத்தில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரத்திற்கு வர துவங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், வரும் 13ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்வும், மறுநாள் 14ம் தேதி அரவாண் பலி, அழுகளம் தேர் புறப்பாடு நடக்க உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவில், தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் பங்கேற்பர். இந்தாண்டு விழாவில் பங்கேற்க, நாகர்கோவில், பெங்களூரு, ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் விழுப்புரம் வர துவங்கி உள்ளனர். திருநங்கைகள் கூறுகையில்; தமிழக அரசு எங்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து சமூகத்தில் உயர்த்தி உள்ளது. நாங்கள் தெய்வாக நினைத்து வழிபடும் கூத்தாண்டவரை தரிசனம் செய்ய ஆண்டிற்கு ஒரு முறை விழுப்புரம் வருகிறோம். ஆனால், இங்கு அறை வாடகையை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். கூத்தாண்டவர் கோவிலில், விழா நடக்கும் இடங்களில் போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை. இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
16-Apr-2025
04-May-2025