புதிய வாக்காளர்களுக்கு த.வெ.க.,வினர் வாழ்த்து
செஞ்சி : செஞ்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்களை சந்தித்து த.வெ.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.தமிழகத்தில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் 23, 24ம் தேதி நடந்தது. செஞ்சியில் நடந்த முகாமில் 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்தவர்களை த.வெ.க.,வினர் தொகுதி பொறுப்பாளர் தமிழரசன், பாஸ்கர் தலைமையில் வீடு தேடிச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.நகர தலைமை நிர்வாகி சந்திரசேகர், நிர்வாகிகள் ஹரி சாலோமன், சரவணபிரியன், தயாமூர்த்தி, அருணகிரி, சம்பத், ரெஜிஸ், சூரியா, கருணாகரன், அசோக், மோகன், ஆல்பர்ட், உதயா, சூரியா மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.