உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மைல் கல்களில் மும்மொழி

மைல் கல்களில் மும்மொழி

வானுார்: வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் டிரைவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் 3 மொழிகளில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு வருகிறது.புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வட மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் ஏராளமான லோடு லாரிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிக்கு வருகிறது. புறவழிச்சாலையில் உள்ள மைல் கல்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருந்ததால் அவர்களுக்கு படிக்க சிரமமாக இருந்தது.இதனால் மாற்று திசையிலும் சென்ற நிலையும் இருந்தது. இதையெடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், மைல் கல்களில் இந்தி பெயர்களிலும் ஊர் பெயர்களை எழுத உத்தரவிட்டது.அதன் படி புதுச்சேரி - திண்டிவனம் புறவிச்சாலையில் உள்ள மைல் கல்களில், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு வருகிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் இருபக்கமும் 5 கி.மீ., துாரத்திற்கு ஒரு மைல் கல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்களில், மும்மொழிகளில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு வருகிறது. மொத்தம் 15 மைல் கல்களில் ஊர்பெயர்கள் எழுதப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி