மேலும் செய்திகள்
பெண்களுக்கு நலத்திட்ட உதவி
15-Mar-2025
விக்கிரவாண்டி: மனிதம் காப்போம் அறக்கட்டளை சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, 100 சதவீத தேர்ச்சி தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு, எழுது பொருட்கள் வழங்குதல் என முப்பெரும் விழா மேலக்கொந்தையில் நடந்தது.அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவிற்கு, தலைமை ஆசிரியர் நேதாஜி தலைமை தாங்கினார். ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் முன்னாள் பொது மேலாளர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் கண்ணன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பேபி முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் சந்துரு வரவேற்றார்.பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகள் புவிதா, சூர்யா அர்ச்சனா ஆகியோர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கியும், பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சி பெற ஒத்துழைத்த ஆசிரியர்களை பாராட்டியும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.ஊரக வளர்ச்சித்துறை வைகுந்த வாசன், சமூக ஆர்வலர்கள் குமார், கலிவரதன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாத், செல்வகுமார், கிராம முக்கியஸ்தர்கள் பெரியண்ணசாமி, ஜனார்த்தனன், நடராஜன், ராஜா, குமாரசாமி, கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Mar-2025