உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரவுண்டானாவில் சிறிய அறிவிப்பு பலகையால் அவதி

ரவுண்டானாவில் சிறிய அறிவிப்பு பலகையால் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, ஜானகிபுரம் ரவுண்டானாவில் சிறிய அளவிலான அறிவிப்பு பலகையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் -- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி மாநிலம், எம்.என்.குப்பம் வரை, 29 கி.மீ., துாரத்திற்கான பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம் ஜானகிபுரம் ரவுண்டானா மேம்பாலத்தில் இருந்து திருச்சி, சென்னை மார்க்கங்களுக்கு பிரிந்து செல்ல சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரவுண்டானாவிற்கு முன் சாலையில் திருச்சி, சென்னை மார்க்க சாலைகளை குறிக்க அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகை மிகவும் சிறிய அளவில் இருப்பதால், துாரத்தில் இருந்து வேகமாக வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. இதனால், ரவுண்டானா அருகில் வந்து எந்த பக்கம் செல்வது என தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இதில் விழுப்புரத்திற்கு செல்வதற்கு குறிப்பிடவில்லை. எனவே, வாகன ஓட்டிகள், திருச்சி, சென்னை மார்க்கங்களுக்கு சுலபாக பிரிந்து செல்ல மெகா சைஸ் அறிவிப்பு பலகை வைக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி