விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடு; இளைஞரணி தலைவர் அழைப்பு
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் சுரேஷ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் த.வெ.க., முதல் மாநில மாநாடு நாளை 27ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று மாநாட்டு பேருரையாற்ற உள்ளார். மாநாட்டில், த.வெ.க., நிர்வாகிகள், தாய்மார்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.