சாலையோர கடை இருவர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சி சாலையில் ரோந்து சென்றனர். கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே நெடுஞ்சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து, திறந்த வெளியில் கேஸ் சிலிண்டர் வைத்து ஆபத்தான நிலையில் டிபன் கடை நடத்தியதை பார்த்தனர். டிபன் கடை நடத்திய விழுப்புரம் சிதம்பரனார் தெருவை சேர்ந்த அகத்தியன் சகாயசெல்வம் மனைவி எலன்லாவன்யா, 36; மீதும், அதன் அருகே மற்றொரு இடத்தில் கடை வைத்திருந்த சாலாமேடு அரசன் நகரை சேர்ந்த ஜோதிதுரை மனைவி தேவி, 45; ஆகியோர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.