உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திண்டிவனம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று மாலை, பெரும்பாக்கம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிந்த வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் மதுபாட்டில் கடத்திய வானுார் தாலுகா, ஒழிந்தியாம்பட்டு கண்ணதாசன், 32; குணாலன், 23; ஆகியோரை கைது செய்து, இருவரின் பையில் இருந்த 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை