உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தல் இருவர் கைது

மதுபாட்டில் கடத்தல் இருவர் கைது

கோட்டக்குப்பம்: புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில், ஏட்டுகள் செல்வம், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர், இ.சி.ஆர்., புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி பைக்கில் சென்ற இருவரை மடக்கி விசாரித்து பைக்கை சோதனை செய்தனர். புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் வாங்கி சென்று மரக்காணத்தில் விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரியவந்தது. மதுபாட்டில் கடத்திய மரக்காணம் வேளாங்கண்ணி மகன் ஜெயசூர்யா 26; எழிலரசன் மகன் ஏழுமலை, 24; ஆகிய இருவரை கைது செய்து, 65 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ