மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது
04-May-2025
வானுார்: முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.வானுார் அடுத்த கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மோகன்ராஜ், 37; இவருக்கும், ஆலங்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த அய்யனார் மகன் ராஜ்குமார், 37; என்பவருக்கும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தி.மு.க., பா.ம.க., கட்சி தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு பேசாமல் இருந்தனர்.இந்நிலையில் கடந்த 30ம், தேதி கோட்டக்கரையில் நின்றிருந்த மோகன்ராஜ் உடன், அங்கு வந்த ராஜ்குமார், அவரது நண்பர் நாவப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கிருபாநந்தன், 23; ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த இருவரும் மோகன்ராஜை ஆபாசமாக திட்டி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜ்குமார், கிருபாநந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
04-May-2025