உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு சிறுமிகள் மாயம்: போலீஸ் விசாரணை

இரு சிறுமிகள் மாயம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம்,:விழுப்புரத்தில் மாயமான 2 சிறுமிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி; பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.இதேபோன்று, ராமையன்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து மாயமானது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ