உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரண்டு மனைவிக்காரர் தற்கொலை

இரண்டு மனைவிக்காரர் தற்கொலை

விழுப்புரம்: குடும்ப பிரச்னையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் அடுத்த காங்கியனுாரை சேர்ந்தவர் மூர்த்தி, 48; இவருக்கு சாந்தி, மகேஷ்வரி ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 17ம் தேதி விஷ காய் சாப்பிட்டு மூர்த்தி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை