உடலில் மது பாட்டில் கட்டி கடத்திய இரு பெண்கள் கைது
திண்டிவனம் : திண்டிவனம் டவுன் எஸ்.ஐ., செல்வதுரை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை செஞ்சி ரோடு பஸ் ஸ்டாப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரிலிருந்து, திருவண்ணாமலை சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இரு பெண்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் உடலில் துணியுடன் சேர்த்து மதுபாட்டில்களை கட்டி மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. பெண்களின் பைகளிலும் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், செஞ்சி, மலையரசன் குப்பத்தை சேர்ந்த யசோதா, 77, சின்னப்பாப்பா, 45, என, தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 300 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.