உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

பாதாள சாக்கடை பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: பாதாள சாக்கடை பள்ளம் சீரமைக்காததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். விழுப்புரம் ராகவேந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மெயின் ரோட்டில், பாதாள சாக்கடைக்காக குழாய்கள் பதிப்பதிற்காக, சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டது. குழாய் பதித்த பின்பு, மீண்டும் தார் சாலை அமைத்தனர்.ஆனால் சரியான முறையில் சாலை அமைக்காததால், குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதியில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மெகா சைஸ் பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !