உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பல்கலைக்கழக கோகோ போட்டி திண்டிவனம் கல்லுாரி மூன்றாமிடம்

பல்கலைக்கழக கோகோ போட்டி திண்டிவனம் கல்லுாரி மூன்றாமிடம்

திண்டிவனம் : பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான கோகோ போட்டியில், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்தனர்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் கோ கோ போட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் கோகோ அணிகள் பங்கேற்றனர்.இதில், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி மாணவியர்கள் 3ம் இடம் பிடித்தனர். இக் கல்லுாரி மாணவி அண்ணாமலை பல்கலைக்கழக கோ கோ அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, கேரளாவில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகத்திற்கான மகளிர் கோகோ போட்டியில் பங்கேற்க உள்ளார்.வெற்றி பெற்ற அணிக்கு கல்லுாரி பொறுப்பு முதல்வர் நாராயணன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர். உடன் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சிவராமன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ