மேல் ஒலக்கூர் அரசு பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டிக்கு மாநில அளவில் தகுதி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எறிபந்து போட்டியில் மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வு பெற்றுள்ளனர். விழுப்புரத்திலுள்ள ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளியில், மாவட்ட வருவாய் அளவிலான எறிபந்து போட்டிகள் நடந்தது. இதில் திண்டிவனம் கல்வி மாவட்டம், மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்களும், பெண்கள் அணியும், 17 வயதிற்குட்பட்ட பெண் பிரிவில் பெண்கள் அணியும் வெற்றி பெற்று, மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன், உதவி தலைமையாசிரியர் சகாயமேரி, ஞானமணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சிரில்குமார் ராபின், பிரகாஷ் ஆகியோர்களுக்கும் பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.