உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வக்ரகாளியம்மன் கோவில் குளம் ரூ. 1.54 கோடி செலவில் புதுப்பிப்பு

வக்ரகாளியம்மன் கோவில் குளம் ரூ. 1.54 கோடி செலவில் புதுப்பிப்பு

வானுார்: திருவக்கரை கிராமத்தில் உள்ள வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவில் குளம் ஒரு கோடியே 54 லட்சம் செலவில் புனரமைக்கப்பட உள்ளது.இந்த கோவிலில், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோவில் அருகில் குளம் அமைந்துள்ளது. குளம் சீரமைக்கப்படாமல், புதர் மண்டியும், பாசி பிடித்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.தற்போது, இந்து அறநிலையத்துறை மூலம் ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில், குளம் சீரமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவில் குளம் சீரமைக்க டெண்டர் விட்டு முடிக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்ரூவல் இன்னும் கிடைக்கவில்லை. வந்தவுடன் பணிகள் துவங்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை