மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (11.04.2025) திருவள்ளூர்
11-Apr-2025
செஞ்சி: செஞ்சி முல்லை நகர் வள்ளலார் கோவிலில் 11வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு வள்ளலாருக்கு சிறப்பு அலங்காரம், ஞான தீபம் ஏற்றினர். 6.10 மணிக்கு அகவல் வழிபாடும், 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றுதல், காலை 8.15 மணிக்கு வள்ளலார் வீதி உலா நடந்தது.அதைத் தொடர்ந்து, சிறுமி பூமழையின் சன்மார்க்க சங்க சொற்பொழிவு, 12:00 மணிக்கு சத்திய சாயி சேவா சமிதியின் சர்வ மத பஜனையும், ஜோதி வில்லுப்பாட்டு குழுவின் வள்ளலார் கொள்கை வில்லுப்பாட்டு, மதியம் 2:00 மணிக்கு இன்னிசை கச்சேரி, 4:00 மணிக்கு நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11-Apr-2025