வி.ஏ.ஓ., சங்க செயற்குழு கூட்டம்
விழுப்புரம்; தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் லோகநாதன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜாம்பு காந்தன், பொருளாளர் பாரதிராஜா முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் புஷ்பகாந்தன் சிறப்புரையற்றினார்.இதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். 10ம் வகுப்பு தகுதியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு பட்டப்படிப்பாக மாற்றுதல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முறையான பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில், வட்ட செயலாளர் வீரசேகரன், பொருளாளர் கமலக்கண்ணன், மகளிரணி இந்துமதி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.