ரூ.20,000 லஞ்சம் வி.ஏ.ஓ., சிக்கினார்
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் அண்ணாமலை, 56; மகள் அருள்பிரபா. இவர், விழுப்புரம் அருகே சாலைஅகரம் கண்ணப்பன் நகரில், புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். மனைக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்தார். சாலைஅகரம் வி.ஏ.ஓ., சதீஷ் என்பவரிடம் அணுகினார். பட்டா மாறுதல் செய்ய, 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று காலை, சாலைஅகரம் கோலியனுார் பெட்ரோல் பங்க் அருகே சதீஷிடம், 20,000 ரூபாய் லஞ்ச பணத்தை அண்ணாமலை வழங்கிய போது, மறைந்திருந்த போலீசார், அவரை கைது செய்தனர்.