மேலும் செய்திகள்
வி.சி.க., பொதுக்கூட்டம்
05-Jul-2025
விக்கிரவாண்டி : விழுப்புரம் மத்திய மாவட்ட வி.சி., கட்சி சார்பில் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட செயலாளர் திலீபன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், கிட்டு, வெற்றிவேந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் சந்தர் வரவேற்றார்.கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., 'மதச்சார்பின்மை காப்போம்' ஊர்வலத்தின் தீர்மானங்களை விளக்கி பேசினார்.மாவட்ட செயலாளர்கள் தனஞ்செழியன், பொன்னி வளவன், மலைச்சாமி, விடுதலைச் செல்வன், கள்ளக்குறிச்சி அறிவுக்கரசு, மயிலம் ஒன்றிய செயலாளர் வேந்தன் கார்மேகம், ரஞ்சித்குமார்.திண்டிவனம் நகர செயலாளர் இமயன், எழிலரசன், தி.மு.க., சார்பில் பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், நகர செயலாளர் நைனா முகமது, நகர காங்., தலைவர் குமார், ம.தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி.மாநில நிர்வாகி திருவேங்கடம், மாவட்ட நிர்வாகி பரசுராமன், சுரேஷ், மகளிர் அணி ஆனந்தி, மகேஸ்வரி, பிரபாவதி, அர்ச்சனா, மகாலட்சுமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நகர பொருளாளர் புருஷோத் நன்றி கூறினார்.
05-Jul-2025