உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்

வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்

செஞ்சி : வல்லம் ஒன்றிய வி.சி., கட்சி செயற்குழு கூட்டம் வல்லத்தில் நடந்தது.ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் குணபாலன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளமாறன், மாநில துணைச் செயலாளர் துரை வளவன் ஆகியோர் பேசினர். விடுதலை தீரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், உளுந்துார்பேட்டையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு வல்லம் ஒன்றியத்தில் இருந்து 20 வாகனங்களில் மகளிர்களை அழைத்துச் செல்வது, மகளிர் விடுதலை இயக்க மகளிர் அணியை கட்டமைப்பு செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ