உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கலாசாரம், பண்பாட்டை பேணும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கலாசாரம், பண்பாட்டை பேணும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

இறைவனை நினைத்துக்கொண்டு எதனை ஆரம்பித்தாலும் அது நன்றாவே நடக்கும். குழந்தைகளுக்கு கல்வி ரொம்ப முக்கியம். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி, ஹயக்ரீவரை வணங்கி கல்வியை ஆரம்பித்தால் வாழ்வில் உயரலாம். எதை நன்றாக ஆரம்பித்தாலும், அது நல்லபடியாகவே முடியும். வித்யாரம்பம் நன்னாளில் கல்வியை ஆரம்பித்த குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையும். இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் 'தினமலர்' சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது. -ராமபத்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி. குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கனவு. அந்த கனவு நனவாக 'தினமலர்' நாளிதழ் வித்யாரம்பம் நிகழ்ச்சி வழியாக பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இந்த நல்ல நாளில் கல்வியை துவங்கிய குழந்தைகளுக்கு வாழ்த்துகள். குழந்தைகள் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி சிறந்த குடிமகனாக உருவெடுக்க வேண்டும். -வைத்தியநாதன், எம்.எல்.ஏ., 'தினமலர்' நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் பிள்ளைகளின் கல்வி பயணத்தை துவக்கியுள்ளனர். இதன் மூலம் சிறந்த கல்விக்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைத்துள்ள குழந்தைகளுக்கு, வாழ்த்துகள். குழந்தைகள் மென்மேலும் கல்வியிலும், வாழ்விலும் உயர வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள 'தினமலர்' நாளிதழ்க்கு பாராட்டுகள். 'தினமலர்' நாளிதழ் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது. - குலோத்துங்கன், கலெக்டர். குருகுல காலத்தில் இருந்தே விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து கல்வியை ஆரம்பித்து வருகிறோம். இது நமது பண்பாடு. அந்த பணியை 'தினமலர்' ஆண்டுதோறும் சிறப்பாகவே செய்து வருகிறது. 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளில் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப இந்தாண்டு இரு இடங்களில் பிரித்து வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் கலாசாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருவது பாராட்டுக்குரியது. 'தினமலரின்' இப்பணி மென்மேலும் தொடர வேண்டும். -செல்வகணபதி, எம்.பி., எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். இதனால் தான் கல்வியின் துவக்க நாளான விஜயதசமியில் அரிச்சுவடி ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இந்த நாளில் கல்வியை துவங்கியுள்ள குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஏற்பாடுகள் அனைத்தும் சூப்பர். 'தினமலர்' நாளிதழுக்கு பாராட்டுகள். -செவ்வேள், சுகாதாரத் துறை இயக்குநர்.. விஜயதசமி நன்னாளில் எந்த வித்தையை துவங்கினாலும், அது நன்றாகவே நடக்கும். இந்த நன்நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியை மிக சிறப்பாக 'தினமலர்' நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது. குழந்தைகளுக்கு இறைவன் எழுத்தையும், அறிவையும், சமூக நல்லுறவையும் கற்றுத்தருவார். குழந்தைகளின் கல்வி, எதிர்காலமும் சிறப்பாக அமையும். - வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.,.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை