உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி - மேலக்கொந்தை ரயில்வே பாலம்; பராமரிப்பின்றி பாழ்

விக்கிரவாண்டி - மேலக்கொந்தை ரயில்வே பாலம்; பராமரிப்பின்றி பாழ்

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி- மேலக்கொந்தை ரயில்வே மேம்பாலம் பராமரிப்பின்றி புற்கள் முளைத்து தண்ணீர் தேங்கி பாழாகி வருகிறது. விக்கிரவாண்டியின் மேற்கு பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்திற்கு விக்கிரவாண்டி மேலக்கொந்தை ரயில்வே மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டும் . நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரயில்வே மேம்பாலம் சில மாதங்களாக பராமரிப்பு இல்லாததால், பாலத்தின் நடு பகுதி, பாலத்தின் ஓரங்களில் மண் குவிலாக சேர்ந்து அதில் புற்களும் ,செடிகளும் முளைத்துள்ளன. பாலத்தில் சரியான மழை நீர் வடிகால் வசதியும் இல்லாததால் மழை காலத்தில் மழைநீர் பாலத்தில் தேங்கி நிற்பதால் பாலம் பழுதாகி வருகிறது. பாலத்தின் மீது மின் விளக்குகளும் எரியாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.நீண்ட கால மக்கள் பயன்பாட்டிற்கு என தொலை நோக்கு பார்வையுடன் கட்டப்பட்ட மேம்பாலம் பராமரிப்பு இல்லாததால், குறுகிய காலத்தில் பழுதடைந்து உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ